அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக ஒபாமா பிரச்சாரம்…!!

25 October 2020, 3:00 pm
Obama_Updatenews360
Quick Share

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3ம் தேதி நடைபெற உள்ளது. அனல் பறக்கும் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளனர்.

us-president-trumph-updatenews360-1

முன்னாள் அதிபர் ஒபாமா புளோரிடாவில் ஜோ பைடனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, மியாமில் தொலைக்காட்சி பேட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்பை விமர்சனம் செய்தார்.

donald_trump_joe_biden_updatenews360

மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த ட்ரம்பிடம் எந்த திட்டமும் இல்லை என ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, பிரசாரத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில் கொரோனா என்ற சொல்லை மக்கள் அதிகளவு கேட்டு உள்ளதாகவும், அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நாளான நவம்பர் 4-ந் தேதி முதல் யாரும் அந்த சொல்லை கேட்கும் நிலை வராது எனவும் தெரிவித்து உள்ளார்.

Views: - 0

0

0