பியர் கிரில்ஸ்க்கு பிடித்த புகைப்படம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!!

7 February 2021, 10:27 am
Quick Share

‘மேன் வெர்சஸ் வைல்ட்’ பிரபலமான பியர் கிரில்ஸ், தனக்கு பிடித்த புகைப்படம் குறித்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியுடன், காட்டில் டீ குடிக்கும் போது எடுத்த புகைப்படம் தான் தனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

பிரிட்டனை சேர்ந்த வன ஆர்வலரும், டிஸ்கவரி உள்ளிட்ட பிரபல டிவிக்களில் வனம் தொடர்பான காட்சிகளை படமெடுத்து நிகழ்ச்சி வழங்குபவர் பியர் கிரில்ஸ். டிஸ்கவரி ‘டிவி’ சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சிக்காக, இவர் சமீபத்தில் உத்தரகண்ட் மாநில வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

வனப்பகுதிக்குள் மனிதன் எவ்வாறு உயிர் வாழ முடியும்? வனப்பகுதிக்குள் தனியாக சிக்கி கொண்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது, வன விலங்குகளிடம் இருந்து எவ்வாறு தப்பி வருவது, எவ்வித உபகரணமும் இல்லாமல் வெளியேறுவது எப்படி, வனத்தில் விலங்குகள் நடமாட்டத்தை தெரிந்து கொள்வது எப்படி உள்ளிட்ட விஷயங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த கடந்த 2019 ஆண்டு, ஆகஸ்ட் 12ம் தேதி ஒளிபரப்பானது. உத்தரகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்ட ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில், பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி பங்கேற்றார். ஒளிபரப்பிற்கு சில மாதங்களுக்கு முன் படமாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, டிஸ்கவரி சேனலில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் 180 நாடுகளில் ஒளிபரப்பானது. மேலும் இணையதளத்திலும் ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் பியர் கிரில்ஸ் பிரதமர் மோடியுடன், டீ குடிக்கும் காட்சியை பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் குளிரான தட்பவெப்ப நிலையில், பிரதமர் மோடியுடன் டீ குடிக்கும் இந்த புகைப்படம், எனக்கு பிடித்த புகைப்படங்களுள் ஒன்று என பதிவிட்டு, அந்த போட்டோவையும் பகிர்ந்திருக்கிறார். இந்த போட்டோ 95 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ் பெற்றதோடு, 16 ஆயிரம் ரீடுவிட்களை பெற்று வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0