சீனாவில் தொடர் கனமழையால் பயங்கர நிலச்சரிவு: ஒருவர் பலி…20 பேர் மாயம்…மீட்பு பணிகள் தீவிரம்..!!

Author: Aarthi Sivakumar
26 September 2021, 4:22 pm
Quick Share

சிச்சுவான்: சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், பலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கே டையான்குவான் கவுன்டியில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கனமழையால் சில பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 3 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார். 2 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதுவரை 15க்கும் மேற்பட்டோர் காணவில்லை என கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிச்சுவான் மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து டையான்குவான் பகுதிக்கு 100க்கும் மேற்பட்ட நபர்கள், தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Views: - 272

0

0