விவசாயப் போராட்டம் குறித்து ஒருதலைப்பட்ச விவாதம் நடத்திய பிரிட்டன் எம்பிக்கள்..! இந்தியா கடும் கண்டனம்..!

Author: Sekar
9 March 2021, 12:33 pm
Farmers_Protest_Delhi_UpdateNews360
Quick Share

விவசாய சீர்திருத்தம் தொடர்பான மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் அமைதியான போராட்டங்கள் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த மின்னணு-மனு மீதான சில பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நடந்த விவாதத்திற்கு, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பிரிட்டிஷ் பாராளுமன்ற வளாகத்திற்குள் நேற்று மாலை நடைபெற்ற விவாதத்தை இந்திய தூதரகம் ஒருதலைப்பட்ச விவாதம் என்றும் தவறான கருத்துக்களைக் கொண்டது என்றும் கூறியது.

“ஒரு சீரான விவாதத்திற்கு பதிலாக, ஆதாரங்கள் அல்லது உண்மைகள் இல்லாமல் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. உலகில் மிகப் பெரிய அளவில் செயல்படும் ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகள் மீது தவறான எண்ணத்தை உருவாக்குகின்றன.” என்று பிரிட்டன் பாராளுமன்ற வளாகத்தில், ஒரு மின்னணு-மனு தொடர்பாக நடந்த விவாதத்திற்குப் பின்னர், இந்திய தூதரகம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

1,00,000 கையெழுத்து வரம்பைத் தாண்டிய ஒரு மின்-மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவாதம் நடைபெற்றது. அதற்கு ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் மனுக்கள் குழு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

விவசாய சீர்திருத்தம் தொடர்பான சட்டங்கள் ஒரு உள்நாட்டு விஷயம் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் முன்பு மீண்டும் வலியுறுத்திய போதிலும், பாகிஸ்தான் சார்பு பிரிட்டன் எம்பிக்களின் தொடர் அடாவடியால் இந்திய தூதரகம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியாவின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. “இந்தியாவும் இங்கிலாந்தும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நன்மைக்கான சக்தியாக செயல்படுகின்றன. மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு பல உலகளாவிய பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது” என்று கூறியது.

Views: - 167

0

0