ஜோ பிடென் பதவியேற்பு விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா..!

23 January 2021, 4:34 pm
Biden_Oath_Taking_Ceremony_Security_UpdateNews360
Quick Share

அமெரிக்காவில் ஜோ பிடெனின் பதவியேற்புக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வாஷிங்டன் டி.சி.க்கு சென்ற சுமார் 150 முதல் 200 தேசிய காவல்படை வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஜோ பிடென் கடந்த ஜனவரி 20’ஆம் தேதி, வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்த நிகழ்விற்கு சுமார் 25,000 வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பாதுகாப்புக் காவலர்களின் விகிதம் ஜனவரி 21 அன்று வாஷிங்டன் டி.சி.யில் நிறுத்தப்பட்ட 25,000’க்கும் மேற்பட்ட வீரர்களில் ஒரு சிறிய பகுதியே ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க கேபிட்டலை முற்றுகையிட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்பு நடைபெற்றது.

ஜனவரி 6’ஆம் தேதி ஐந்து பேரைக் கொன்ற கொடிய தாக்குதலுக்குப் பிறகு, இரகசிய சேவை பதவியேற்புக்கான பாதுகாப்பை முடுக்கிவிட்டது. முக்கியமாக நாட்டின் தலைநகரை ஊரடங்கில் வைக்க முடிவு செய்தது.

25,000’க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் போலீசார் தலைநகர பாதுகாப்பிற்கு அழைக்கப்பட்டனர். நேஷனல் மால் மூடப்பட்டது. குறுக்கு சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், வாஷிங்க்டனில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 150’க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே தற்போதுவரை, 2,06,357 அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவற்றில் 76,966 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக மொத்தம் 225 ராணுவ வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். அதே நேரத்தில் 129,166 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Views: - 0

0

0