ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 21 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Author: kavin kumar
26 August 2021, 5:18 pm
Quick Share

ஆப்கானிஸ்தானில் இருந்து 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். காபூலை, தாலிபான்கள் கைப்பற்றியதும், அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பினார். அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். ஆப்கானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தலிபான்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சும் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள், நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். விமானத்தின் இறக்கைகளிலும், சக்கரங்களிலும் தொற்றிக் கொண்டு பலர் தப்ப முயன்ற காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தலிபான்களின் கடந்த கால ஆட்சியின்போது ஏற்பட்ட கஷ்டங்களை நினைத்து அவர்கள் எப்படியாவது அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல நினைக்கின்றனர். காபூல் விமான நிலையத்துக்கு வரும் எந்த விமானத்திலாவது ஏறி செல்லும் மனநிலையில், பீதியோடு விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 37 அமெரிக்க ராணுவ விமானங்கள் மூலம் 12 ஆயிரத்து 700 பேரும், நட்பு நாடுகளின் விமானங்கள் மூலம் 8 ஆயிரத்து 900 பேரும் மீட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.மக்களை வெளியேற்றும் பணியை 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும், கெடு நீட்டிப்பு கிடையாது என்று தலீபான்கள் கூறிவிட்டதால், மீட்புப்பணியை அமெரிக்கா விரைவுபடுத்தி உள்ளது.

Views: - 356

0

0