சீண்டினால் சிதைக்கப்படும்..! மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி..! அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..!

14 April 2021, 3:00 pm
India_Pakistan_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை விட அதிகமாக உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை ஒரு அறிக்கையில் அமெரிக்க பாராளுமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. 

அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவலகம் (ஓடிஎன்ஐ) அமெரிக்க பாராளுமன்றத்திற்கு வழங்கும் தனது வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஒரு பொது யுத்தம் சாத்தியமில்லை என்றாலும், இருவருக்கும் இடையிலான நெருக்கடிகள் இன்னும் தீவிரமடையக்கூடும் எனவும், இது அந்த பிராந்தியத்தில் ஒரு தீவிர ஆபத்தை உருவாக்கும் எனக் கூறியுள்ளது.

“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா கடந்த காலங்களை விட பாகிஸ்தான் மேற்கொள்ளும் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது மிக அதிகமாக உள்ளது. மேலும் அதிகரித்த பதட்டங்கள் இரு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோதலின் அபாயத்தை எழுப்புகின்றன. காஷ்மீரில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் வன்முறை மற்றும் அமைதியின்மையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் மோதல் உருவாக வாய்ப்புள்ளது.” என்று அது கூறியது.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா வாபஸ் பெற்றதோடு, ஆகஸ்ட் 2019’இல் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்த பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் சிக்கலாக உள்ள நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கிடையில் தூதர்களே இல்லாமல் உள்ளன.

பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடனான சாதாரண அண்டை உறவுகளை விரும்புவதாகவும், பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது என்றும் இந்தியா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடிஎன்ஐ அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் சிரியாவில் நடக்கும் சண்டைகள் அமெரிக்கப் படைகளுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அதே நேரத்தில் அணு ஆயுத இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் உலகிற்கு ஒரு கவலையாக இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான செயல்பாட்டு வன்முறை, லிபியாவில் வெளிநாட்டு சக்திகளின் செயல்பாடு மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட பிற பகுதிகளில் ஏற்பட்ட மோதல்கள் அதிகரிக்கவோ அல்லது பரவவோ வாய்ப்புள்ளது என்று அது கூறியுள்ளது.

“தலிபான்கள் போர்க்களத்தில் வெற்றிகளைப் பெற வாய்ப்புள்ளது. அமெரிக்க கூட்டணி ஆதரவைத் திரும்பப் பெற்றால் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தலிபான்களை எதிர்த்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள போராடும். ஆப்கானிஸ்தான் தொடர்ந்து போர்க்களத்தில் பின்னடைவுகளை எதிர்கொள்கிறது. மேலும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக இராணுவ வெற்றியை அடைய முடியும் என்று தலிபான் நம்பிக்கை கொண்டுள்ளது.” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆப்கானிஸ்தான் படைகள் முக்கிய நகரங்களையும் பிற அரசாங்க கோட்டைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றன. ஆனால் அவை தற்காப்புப் பணிகளில் பிணைக்கப்பட்டுள்ளன. மேலும் மீண்டும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை வைத்திருக்கவோ அல்லது 2020’ஆம் ஆண்டில் கைவிடப்பட்ட பகுதிகளை மீட்கவோ போராடியுள்ளன” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

Views: - 33

0

0