பாகிஸ்தானில் பயங்கரம்..! பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதியை குடும்பத்துடன் கொலை செய்த பயங்கரவாதிகள்..!

5 April 2021, 2:26 pm
Judge_Aftab_Afridi_Updatenews360
Quick Share

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாபி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதி, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது, நேற்று இரு சக்கர மோட்டார் வாகனத்தில் சென்ற ஆயுதமேந்திய தீவிரவாதிகள் நீதிபதியின் வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டதில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் நீதிபதியின் டிரைவர் உட்பட மேலும் இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“நீதிபதி, அவரது 10 வயது மகன், மனைவி மற்றும் ஆறு வயது மகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் இரண்டு போலீஸ்காரர்களும் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

எந்தவொரு குழுவோ அல்லது தனிநபரோ இதுவரை தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.

Views: - 0

0

0

Leave a Reply