ஹிந்துக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிய பாகிஸ்தான் அரசு..! அமைச்சரின் மேற்பார்வையில் வெறிச்செயல்..! (வீடியோ)

22 May 2020, 4:56 pm
Pakistan_hindu_basti_demolition_updatenews360
Quick Share

சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களும் துன்புறுத்தல்களும் பாகிஸ்தானில் தினசரி நிகழ்வுகளாக இருந்தாலும், தற்போது நடந்துள்ள சம்பவம் பாகிஸ்தானின் உச்சபட்ச கொடூர முகத்தை வெளிக்காட்டியுள்ளது.

இஸ்லாமிய தேசத்தில் உள்ள மத சிறுபான்மையினர் தொடர்ந்து முஸ்லிம் மக்களின் தயவில் உள்ளனர். நாட்டில் மத சுதந்திரம் குறித்து பாகிஸ்தான் அரசாங்கம் பெருமை பேசிக்கொண்டிருந்தாலும், அரசாங்கத்தில் உள்ள உயர் மட்டத்தினரால் நிகழ்த்தப்படும் அட்டூழியங்கள் வேறுவிதமாகப் பேசுகின்றன.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பவல்பூரின் சிறுபான்மை இந்து சமூகத்தினரின் குடியிருப்புகளை நாட்டின் வீட்டுவசதி அமைச்சரின் கண்காணிப்பின் கீழ் இடித்து தள்ளப்பட்டது.

இந்த முகாம்களை இடிப்பது பாகிஸ்தானின் வீட்டுவசதி அமைச்சர் தாரிக் பஷீர் சீமா முன்னிலையில் செய்யப்பட்டது. அவர் இம்ரான் கான் அமைச்சரவையில் முக்கிய உறுப்பினராக உள்ளார். சீமாவுடன் பாகிஸ்தானின் முதன்மை தகவல் அதிகாரி ஷாஹித் கோகரும் இருந்தார்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கள் வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பதை பார்த்தபோது, அவர்களால் அழுது புலம்ப மட்டுமே முடிந்தது.

முரண்பாடாக, சிறுபான்மை உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் அரசாங்கத்தைத் தாக்கிய சில நாட்களில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வருகிறது.

சமீபத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், இம்ரான் கானின் பி.டி.ஐ கட்சியைச் சேர்ந்த மற்றொரு அரசியல்வாதி, பஞ்சாப் மாகாணத்தில், கானேவால் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த வீடுகள் மற்றும் மயானங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

Leave a Reply