புல்வாமா தாக்குதல் இம்ரான் கான் அரசின் மாபெரும் சாதனையா..? மார்தட்டிக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சரால் பரபரப்பு..!

29 October 2020, 7:55 pm
pulwama_updatenews360
Quick Share

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இத்தனை காலம் பாகிஸ்தான் மறுத்து வந்தது அப்பட்டமான பொய் என்பதை இம்ரான் கான் அமைச்சரவையின் ஒரு முக்கிய அமைச்சரே ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள இம்ரான் கான் அரசின் உத்தரவின் பேரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன், புல்வாமா தாக்குதலை இம்ரான் கான் அரசின் மிகப்பெரிய பெரிய சாதனை என்று விவரித்தார்.

“நாங்கள் அவர்களின் எல்லைக்குள் சென்று இந்தியாவைத் தாக்கினோம். புல்வாமா இம்ரான் கான் தலைமையில் மக்களின் வெற்றியாக இருந்தது. நீங்கள் உட்பட பாகிஸ்தானியர்கள் அனைவரும் அந்த வெற்றியின் ஒரு பகுதியாக இருக்கிறோம்” என்று அமைச்சர் கூறினார்.

புல்வாமாவில் நடந்தது என்ன?

கடந்த வருடம் பிப்ரவரி 16’ஆம் தேதி ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் படையணி சென்ற வாகனத்தின் மீது ஒரு வெடிகுண்டு நிரம்பிய எஸ்யூவி கார் மோதி வெடித்ததில் 40 ஜவான்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை பின்னர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது உரிமை கோரியது. தாக்குதல் நடத்தியவர்கள் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என அடையாளம் காணப்பட்டார். ஒரு வருடத்திற்கு முன்னர் குழுவில் சேர்ந்த ககாபோராவைச் சேர்ந்த 22 வயதான ஆதில் அகமது தார் என்ற வீடியோவையும் அவர்கள் வெளியிட்டனர்.

எனினும், இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில் , பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலேயே இந்த தாக்குதலை நடத்தியது தாங்கள் தான் என வெளிப்படையாகக் கூறி, தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்பி, பாதுகாப்புப் படையினரையும், அப்பாவி மக்களையும் கொன்று குவிப்பதை இம்ரான் கான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு வரும் பாகிஸ்தான், இந்த விவகாரத்தால் மேலும் சிக்கலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 37

0

0

1 thought on “புல்வாமா தாக்குதல் இம்ரான் கான் அரசின் மாபெரும் சாதனையா..? மார்தட்டிக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சரால் பரபரப்பு..!

Comments are closed.