ஐரோப்பிய நாடுகளுக்குள் செயல்பட பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை..! போலி விமானிகளால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு..!

30 June 2020, 10:26 pm
PLA_Airlines_UpdateNews360
Quick Share

ஜூலை 1 முதல் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸை 6 மாதங்களுக்கு ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது. நாட்டின் சிவில் விமானிகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி உரிமம் வைத்திருப்பதாகவும், பறக்க தகுதியற்றவர்கள் என்றும் பாகிஸ்தானின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாகிஸ்தானில் 262 விமானிகளை பணியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமான போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் இந்த விமானிகளின் லைசென்ஸ் சந்தேகத்திற்குரியது என்று குறிப்பிட்டார்.

“இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான உரிமையுடன், ஜூலை 1, 2020 முதல் 6 மாத காலத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு செயல்படுவதற்கான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் அங்கீகாரத்தை ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.” என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து பயணிகளும் தங்களது முன்பதிவுகளை பிற்காலத்திற்கு நீட்டிக்க அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெற விருப்பம் தெரிவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் நிர்வாகத்தால், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதால், இந்த இடைநீக்கத்தை விரைவாக நீக்குவதை எதிர்பார்க்கலாம் அந்த விமான நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Leave a Reply