எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆயுதமாக கொரோனா தொற்று..! ஐநாவில் பாகிஸ்தானை கண்டித்த இந்தியா..!

3 November 2020, 1:00 pm
India_Pakistan_UpdateNews360
Quick Share

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை மேம்படுத்துவதற்காக கொரோனா வைரஸ் தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறியதுடன், இந்தியாவின் சமூகங்களிடையே மதரீதியிலான பிளவுகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சமகால வடிவிலான இனவெறி, இன பாகுபாடு மற்றும் தொடர்புடைய சகிப்பின்மை குறித்து சிறப்பு அறிக்கையாளருடன் ஒரு உரையாடலில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர மிஷனின் முதல் செயலாளர் ஆஷிஷ் சர்மா, பாகிஸ்தானின் வெறுக்கத்தக்க பேச்சு இந்தியாவில் ஒரு சமூகத்தை நோக்கியது மட்டுமல்ல, நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் உயர் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செய்து வருகிறது.

தொற்றுநோயால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தொற்றுநோயைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவை மேம்படுத்தியுள்ளது.” என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் இந்தியாவில் வன்முறை மற்றும் சகிப்பின்மையைத் தூண்ட முயற்சிக்கும் தடையற்ற வெறுப்பு பேச்சுக்களை பயன்படுத்த முயன்றது என ஐ.நா. மன்றத்தில் அவர் கூறினார். மேலும் ஐ.நா. தளத்தை தனது மோசமான அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்வைக்க துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கண்டித்துள்ளது.

“பாகிஸ்தான் எங்கள் மத சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்க முயற்சிக்கிறது” என்று சர்மா மேலும் கூறினார். அதிர்ஷ்டவசமாக, இந்தியா ஒரு ஜனநாயக கட்டமைப்பின் கீழ் அனைத்து சமூகங்களும் இணக்கமாக வாழும் பன்மைத்துவம் மற்றும் சகவாழ்வு பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதால் அவர்களின் ஆத்திரமூட்டல் செவிடன் காதில் ஊதும் சங்கு போல் உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்தியா பாகிஸ்தானுக்கு தங்கள் சொந்த நாட்டில் சகவாழ்வைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அனைத்து குறுங்குழுவாத வன்முறைகள், பாகுபாடு மற்றும் சகிப்பின்மையை தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியது.

கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதற்கான சவால் மட்டுமல்லாமல், இன்போடெமிக் சவாலையும் இன்று உலகம் எதிர்கொண்டுள்ளது என்று சர்மா கூறினார். இது பல சந்தர்ப்பங்களில் வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் சமூகங்களுக்குள் வெறுப்பை விதைப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஜூன் மாதத்தில், கொரோனா சூழலில் இன்போடெமிக் குறித்த பிராந்திய அறிக்கையை தயாரிக்க இந்தியாவும் 12 நாடுகளும் இணைந்து நிதியுதவி செய்தன. தொற்றுநோய்களின் போது வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான தகவல்களை அதிகரிப்பதை எதிர்கொள்ள ஐ.நா. உறுப்பு நாடுகள் தயாரித்த முதல் அறிக்கை இதுவாகும்.

Views: - 23

0

0

1 thought on “எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆயுதமாக கொரோனா தொற்று..! ஐநாவில் பாகிஸ்தானை கண்டித்த இந்தியா..!

Comments are closed.