கால் போனா என்ன? 320 அடி உயர கட்டிடத்தில் நாங்க இப்படியும் ஏறுவோம்

18 January 2021, 4:41 pm
Quick Share

விபத்தில் கால்களை இழந்த மலை ஏற்ற வீரர் ஒருவர், வீல்சேரில் அமர்ந்து கொண்டு, 320 அடி உயர கட்டிடத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். சமூக வலைதளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஷி வாய் (37 வயது). இவர் நான்கு முறை ஆசிய சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பயங்கர கார் விபத்து ஒன்றில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து போனது. அப்போது முதல், வீல் சேரில் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.

இருப்பினும் வீட்டிலேயே முடங்கி போக மனம் ஒத்துழைப்பு தரவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து, கோவ்லூன் பெனிசுலாவிலுள்ள 320 அடி உயர, நினா டவரில் வீல்சேரின் உதவியுடன் ஏற முடிவு செய்தார். இதன்படி, வீல்சேரில் அமர்ந்து கொண்டே, அந்த உயரமான கட்டிடத்தில் ஏறி முடித்தார். இதற்காக அவருக்கு 10 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.

அவர் தனது சாதனையின் மூலம், சுமார் 5 கோடி ரூபாய் நிதி திரட்டி இருக்கிறார். இதனை முதுகுத் தண்டுவட பாதிப்பால் வாழ்க்கை இழந்தவர்களுக்கு பயன்படுத்த இவர் திட்டமிட்டுள்ளார்.

தனது இந்த சாதனை குறித்து ஷி வாய் கூறுகையில், ‘கட்டிடத்தில் ஏற முதலில் எனக்கு சிறிது பயம் இருந்தது. மலையில் ஏறும்போது, சிறிய பாறைகளையோ, அங்கிருக்கும் சின்ன சின்ன ஓட்டைகளையோ பிடித்துக் கொள்வேன். ஆனால், கண்ணாடியில் ஏறுவது கடினம். சாதித்ததில் எனக்கு மகிழ்ச்சி’ என்றார். ஊனம் என்பது உடலுக்கு தானே தவிர மனதிற்கு அல்ல.. சரிதானே!

Views: - 5

0

0