அடுத்தடுத்து 22 முறை நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!!

15 July 2021, 2:31 pm
EarthQuake_UpdateNews360
Quick Share

தைவானில் ஏற்பட்ட அடுத்தடுத்து 22 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தைவான் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஹூலியன் கவுண்டி நகரத்தில் தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கங்கள் பதிவாகின. நிலநடுக்கம் நகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்ததடுத்து ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவான நிலையில், மற்ற பகுதிகளில் 3 முதல் 5 ரிக்டர் அளவுகளில் பதிவானது. தொடர்ச்சியான 22 நிலநடுக்ககங்களால் அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இதே பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 116

0

0