இரண்டு சுண்டெலிகள் சண்டையிடுவது போன்ற புகைப்படம்..!! (வீடியோ)

14 February 2020, 10:26 pm
Wild Photo- updatenews360
Quick Share

Photograph என்பது ஒரு பொருட்கள் தாம் வெளிவிடுகின்ற அல்லது அவற்றின் மீது தெறித்து வருகின்ற ஒளியினால், ஓர் ஒளியுணர் மேற்பரப்பில் அப்பொருளின் ஒளியுருவை அல்லது தெறியுருவை அல்லது விம்பத்தைப் பதிவித்த படத்தைக் குறிக்கும். இது புகைப்படம் அல்லது நிழற்படம் ஆகிய சொற்களாலும் குறிப்பிடப்பிடப் படுகின்றது.

நிலைத்து இருக்கக்கூடிய முதல் ஒளிப்படம் 1825 ஆம் ஆண்டில் பிரான்சியக் கண்டுபிடிப்பாளரான யோசெப் நிசிபோர் நியெப்சு என்பவரால் உருவாக்கப்பட்டது.

சாதாரணமான காரியமல்லாத இந்த புகைப்படம் மீது பல Photographer காதல் வயப்பட்டு தங்களுக்கு பிடித்த மற்றவர்களுக்கு பிடிக்கும் வகையில் அரிய வகை புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.

அவர்களை ஊக்குவிக்கும் விதமா சிறந்த புகைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏராளமான புகைப்படங்கள் அழகாக எடுத்துள்ளனர்.

இதில் பாலைவனத்தில் நடந்து செல்லும் ஒட்டகத்தை வியக்க வைக்கும் வகையில் அந்த நிழலோடு சேர்த்து புகைப்படம் எடுத்து அசத்தியுள்ளனர். இதே போல கழுகு ஒன்று பறந்து வந்த போது கீழே இருந்த நீரில் அதன் பிம்பங்கள் தெரிவதை போட்டோ எடுத்த இளைஞரின் போட்டோ ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சமீபத்தில் ஒரு குழாயில் இரு ஆந்தைகள் அமர்ந்துள்ளதை கவனித்த சிறுவன் விளையாட்டாக எடுத்து போட்டோ பலரது பாராட்டுகளை பெற்றது. இந்த வரிசையில் அடுத்து ஒரு போட்டோவை லண்டனில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோ காண்போரை வியக்க வைத்துள்ளது.

அந்த போட்டோவில் இருப்பது இரண்டு சுண்டெலிகள். லண்டன சுரங்கப் பாதையில் இரண்டு எலிகள் உணவுக்காக சண்டையிட்டுக் கொள்வது போல புகைப்படத்தை எடுத்துள்ளார் சாம் ரவுலி என்பவர்.

அவர் எடுத்த இரு சுண்டெலி போட்டோ lighting முதல்அனைத்திலும் Perfect ஆக உள்ளதால் wild life photographer என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிவிட்டருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மிகவும் அற்புதமாக எடுத்துள்ள அவருக்கு Updatenews360 சார்பாக வாழ்த்துகள்.