நான்கு நாட்கள்..! 12 பொதுக்கூட்டங்கள்..! பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் மோடி..!

16 October 2020, 4:38 pm
narendra_modi_rally_updatenews360
Quick Share

பீகாரில் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளார். பீகார் பாஜகவின் பொறுப்பாளர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், பிரதமர் குறைந்தது 12 பொதுக் கூட்டங்களில் நான்கு நாட்களில் உரையாற்றுவார் எனத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 23’ஆம் தேதி, முதல் பேரணி சசராமில் நடைபெறும் என்று ஃபட்னாவிஸ் தெரிவித்தார். கயா மற்றும் பாகல்பூரில் மேலும் இரண்டு பேரணிகளில் ஒரே நாளில் உரையாற்றுவார். தெற்கு பீகாரில் உள்ள மூன்று முக்கிய நகரங்கள் அக்டோபர் 28’ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தலுக்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 28’ஆம் தேதி பிரதமர் மீண்டும் மாநிலத்திற்கு வருவார். பிரதமர் மோடி தனது இரண்டாவது பயணத்தின் போது, தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் பாட்னாவில் நடைபெறும் பேரணிகளில் உரையாற்றுவார்.

பின்னர் நவம்பர் 1’ம் தேதி, அவர் சாப்ரா, கிழக்கு சம்பரன் மற்றும் சமஸ்திபூர் மக்களிடையே உரையாற்றுவார். கடைசி மூன்று பேரணிகள் நவம்பர் 3’ஆம் தேதி மேற்கு சம்பரன், சஹர்சா மற்றும் அரேரியாவில் நடைபெறும்.

நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து பாரதீய ஜனதா தேர்தலில் போட்டியிடுகிறது. 2013-2017 ஆம் ஆண்டின் நான்கு ஆண்டு காலத்தைத் தவிர்த்துஇரு கட்சிகளும் 2005 முதல் பீகாரில் ஒன்றாக ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தின்படி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக முறையே 122 மற்றும் 121 இடங்களிலிருந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. நிதீஷ் குமார் தனது கட்சியின் பங்கில் இருந்து 7 இடங்களை ஜித்தன் ராம் மஞ்சியின் எச்.ஏ.எம். கட்சிக்கு வழங்கியுள்ளார். அதே போல் பாஜக 11 இடங்களை விஐபி கட்சிக்கு வழங்கியுள்ளது.

மூன்று கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறும். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10’ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Leave a Reply