நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..! நாடு கடத்தல் வழக்கை 2021’க்கு ஒத்திவைத்தது பிரிட்டன் நீதிமன்றம்..!

1 December 2020, 8:42 pm
Nirav_Modi_UpdateNews360
Quick Share

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஊழல் வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் வைர வியாபாரி நீரவ் மோடியை, இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பான கோரிக்கையை விசாரித்த லண்டனில் உள்ள நீதிமன்றம் வலக்கை 2021’ஆம் ஆண்டிற்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் நீரவ் மோடியை அதுவரை சிறையிலேயே  உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தென்மேற்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறைச்சாலையில் இருந்து வீடியோலிங்க் வழியாக, வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானபோது, டிசம்பர் 29 வரை நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

ஒப்படைப்பு வழக்கின் இறுதி விசாரணைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8’ஆம் தேதிகளில் இரண்டு நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாவட்ட நீதிபதி சாமுவேல் கூஸி சில வாரங்கள் கழித்து தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன் இரு தரப்பிலிருந்தும் இறுதி வாதங்களை அப்போது கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக, நவம்பர் 3’ம் தேதி இந்த வழக்கின் கடைசி விசாரணையில், நீதிபதி கூஸி, மத்திய புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்க இயக்குநரகம் வழங்கிய சில சாட்சி வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்களை கேட்டார்.

இதனால் நீரவ் மோடியின் நாடு கடத்தல் மேலும் தாமாகும் சூழல் எழுந்துள்ளது.

இதற்கிடையே மற்றொரு பக்கம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையாவின் நாடு கடத்தல் விவகாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அவர் விரைவில் நாடுகடத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0