பிகினியில் இருந்த பெண்ணுக்கு விருப்பம் தெரிவித்த கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸ்..!

20 November 2020, 12:55 pm
pope_francis_updatenews360
Quick Share

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படத்திற்கு லைக் போடப்பட்டதை அடுத்து வாடிகன் விளக்கம் கேட்டு இன்ஸ்டாகிராமுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மாடல் நடாலியா கரிபோட்டோவின் புகைப்படம் போப்பின் கணக்கால் லைக் செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், நவம்பர் 13’ஆம் தேதி லைக் செய்யப்பட்டது போல் காணப்பட்டதாக கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர் ஒரு நாள் கழித்து புகைப்படத்திலிருந்து லைக் நீக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 5’ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த புகைப்படத்தில், பள்ளி லாக்கரில் நிற்பதைப் போன்று கரிபோட்டோ பிகினி உடையில் இருந்தார். புகைப்படம் ஒரு பிசாசு கொம்பு ஈமோஜியுடன் “நான் உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை கற்பிக்க முடியும்” என்று தலைப்பிடப்பட்டது. 

போப்பின் கணக்கிலிருந்து லைக் செய்யப்பட்ட கரிபோட்டோவின் புகைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடக தளங்களில் வைரலாகிவிட்டன.

கரிபோட்டோவின் நிர்வாக நிறுவனமான கொய் கொ நவம்பர் 13’ஆம் தேதி தனது சொந்த இன்ஸ்டாகிராம் கணக்கில் படத்தை மறுபதிவு செய்து, அதில் இருந்து ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டது.

இந்நிலையில் வாடிகனுக்கு இந்த விவகாரம் தெரியவந்ததை அடுத்து, அதன் பிரதிநிதி ஒருவர் புகைப்படம் தங்கள் ஊழியர்களால் லைக் செய்யப்பட்டதை மறுத்துள்ளார். மேலும் இது எவ்வாறு நடந்தது என்பதை தீர்மானிக்க விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

போப் பிரான்சிஸ் சமூக ஊடகங்களில் அதிக பின்தொடர்பைக் கொண்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு 7.4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது. கணக்கில் 971 இடுகைகள் உள்ளன மற்றும் வேறு எந்த கணக்குகளையும் அவர் பின்பற்றவில்லை.

Views: - 28

0

0

1 thought on “பிகினியில் இருந்த பெண்ணுக்கு விருப்பம் தெரிவித்த கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸ்..!

Comments are closed.