இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை…பாதுகாப்பான பகுதிக்கு மக்கள் இடம்பெயர்வு..!!

16 June 2021, 6:27 pm
Quick Share

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்க பாதிப்பால் மாலுகு தீவுகள் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து வெளியேறி, உயரமான பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். இதே பகுதியில் கடந்த 3ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Views: - 273

0

0