பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ஏராளமான வீடுகள் சேதம்..ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!!

Author: Aarthi Sivakumar
23 July 2021, 1:17 pm
Quick Share

வாஷிங்டன்: மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா மற்றும் கோஸ்டா ரிக்காவில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவு |  Dinamalar Tamil News

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பனாமா பகுதிகளில் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது.

பனாமாவில் நிலநடுக்கம்- Dinamani

நிலநடுக்கத்தின் மையப்பகுதி பனாமாவின் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது. அப்பகுதி கோஸ்டாரிக்காவின் எல்லை என்பதால் அங்கேயும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. அதேபோல் இரண்டு மணி நேரத்திற்கு பின் அப்பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவில், 6.3 ஆகப் பதிவானது.

பனாமாவின் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது. இதே பகுதியில் மூன்று நாட்களுக்கு முன் நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் பல பகுதிகள் வீடுகள் இடிந்தன. ஆனால், இதனால் ஏற்பட்ட சேதம், பாதிப்புகள் குறித்த முழு தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

Views: - 300

0

0