இந்தோனேசியா சிறைச்சாலையில் தீவிபத்து: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு..!!

By: Aarthi
8 September 2021, 3:55 pm
Quick Share

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள தங்கெராங்க சிறையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து நேரிட்ட கட்டிடத்தில் 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்பட 41 பேர் பலியாகினர். படுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

சிறைச்சாலையில் நேரிட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 342

0

0