கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு ஜெயில் கைதியினால் பிற கைதிகள் செய்த காரியம்…! போலீஸ் வலைவீச்சு…!

27 March 2020, 11:35 am
Quick Share

கடந்த வாரம் கொல்கத்தா நகரத்திலுள்ள டம் டம் ஜெயில் கைதிகள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு வரக்கூடாதென அவர்களை ஊடரங்கு நேரமான இருபத்தியொரு நாட்கள் பெயில் முறையில் விடுவிக்குமாறு முதலில் பணிவாக கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸ் அதிகாரிகள் அதற்கு மறுத்து தெரிவித்ததால் அங்கு கலவரம் உண்டாயிற்று, அதைப்போல்


அமெரிக்கா நாட்டிலுள்ள தெற்கு டகோட்டா நகரத்திலுள்ள சிறப்பு சிறையில் ஒரு பெண் சிறைவாசிக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதனால் பிற சிறைவாசிகள் அந்த சிறையில் இருக்க அச்சப்பட்டு அங்கிருந்து தப்பிக்க ஒரு திட்டத்தை தீட்டியுள்ளனர். அந்த திட்டத்தின் வழியாக ஒன்பது பேர் அச்சிறையிலிருந்து தப்பித்துவிட்டனர்.


அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு தப்பித்துவிட்டதால் பதற்றம் ஏற்பட்டது. அங்குள்ள போலீஸ் படைகளின் சிறப்பான பணியாள் கொரோனாவால் பாதித்த பெண்மணி உட்பட மூன்றுப்பேரை பிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அந்த ஆறுப் பேரை தீவிரமாக தேடிவருகின்றனர். அந்த ஆறுப்பேருக்கும் கொரோனா இருக்கலாமென்று போலீஸ் அதிகாரிகள் யூகித்து வருகின்றனர்.

Leave a Reply