நியூசிலாந்தில் அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர்..! யார் இந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்..?

2 November 2020, 6:27 pm
Newzealand_First_Indian_Minister_UpdateNews360
Quick Share

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஐந்து புதிய அமைச்சர்களை தனது நிர்வாகத்திற்குள் கொண்டு வரும் நிலையில், பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

இந்தியாவில் பிறந்த 41 வயதான ராதாகிருஷ்ணன் சிங்கப்பூரில் கல்வியை முடித்த பிறகு, மேற்படிப்புக்காக நியூசிலாந்து சென்றார்.

வீட்டு வன்முறையில் இருந்து தப்பிப்பிழைத்த பெண்கள், மற்றும் சுரண்டப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்காக வாதிடுவதற்காக அவர் தனது வாழ்க்கையை செலவிட்டுள்ளார்.

அவர் முதல்முறையாக செப்டம்பர் 2017’இல் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019’ஆம் ஆண்டில், அவர் இன சமூகங்களுக்கான அமைச்சரின் நாடாளுமன்ற தனியார் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் தற்போது பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் இன சமூகங்களுக்கான அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 6’ஆம் தேதி அமைச்சராக முறையாக பதவியேற்க உள்ளார்.

இதன் மூலம் அவர் நியூசிலாந்தின் முதல் இந்திய அமைச்சர் எனும் சிறப்பை பெற்றுள்ளார்.

Views: - 23

0

0

1 thought on “நியூசிலாந்தில் அமைச்சராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர்..! யார் இந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்..?

Comments are closed.