இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் : கொளுந்து விட்டு எரியும் போராட்டம்.. வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 10:02 pm
Ranil House Fire - Updatenews360
Quick Share

பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் இலங்கையில் மீண்டும் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்தனர். இதனால், இலங்கையில் மீண்டும் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று இலங்கை அதிபர் மாளிகையை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், தப்பித்தோம் பிழைத்தோம் என மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே ஒடினார்.

இலங்கையில் மக்கள் போராட்டம் உச்ச கட்டம் அடைந்துள்ள நிலையில் அரசமைப்பு விதிகளின் படி இலங்கை சபாநாயகர் தற்காலிக அதிபராக வாய்ப்பு உள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும் என்று அனைத்துக் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தற்காலிக அதிபராக பதவியேற்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தும், அதிபருக்கு சொந்தமான சொகுசு கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேவேளையில், கோத்தபய ராஜபக்சே, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கப்பலில் தப்பிச் செல்வது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை அமைப்பதற்கு ஏதுவாக பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே விலகினார். இன்று மாலை அதற்கான அறிவிப்பை ரணில் வெளியிட்டார்.

இந்த நிலையில் இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 1518

0

0