முதல் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரஷ்ய அதிபர்..!

11 August 2020, 3:03 pm
Viladimir_Putin_UpdateNews360
Quick Share

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்தார். 

கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி, மனித மருத்துவ பரிசோதனைகளின் மூன்று கட்டங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மகள்களில் ஒருவர் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டதாகவும் புடின் கூறினார். சோதனைகளின் போது தடுப்பூசி திறமையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் மேலும், இது கொரோனா வைரஸிலிருந்து நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்றும் கூறினார்.

இதற்கிடையே ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தடுப்பூசியானது முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிக ஆபத்தில் உள்ள நபர்களுக்கு முதலில் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இருப்பினும், ரஷ்யாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல விஞ்ஞானிகள், மாதக்கணக்கில் நீடிக்கும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்னர், அவசர அவசரமாக தடுப்பூசியை பதிவு செய்வதற்கான முடிவை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.

மூன்றாம் கட்ட சோதனைகள் பொதுவாக சில மாதங்களுக்கு நீடிக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.