ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை..! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடுகள்..!

20 March 2021, 1:39 pm
Flood_hits_Australia_UpdateNews360
Quick Share

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடும் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியின் வடக்கே உள்ள பகுதிகளில் உள்ள வெளியேற்ற மையங்களுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்ததாகவும், மழைப்பொழிவு தெற்கே நகரும்போது தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிட்னியில் இருந்து 400 கி.மீ வடக்கே போர்ட் மேக்வாரிக்கு வெளியே ஹேஸ்டிங்ஸ் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு 2013’ஆம் ஆண்டை விட அதிகமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் உள்ள நகரங்களில் ஏற்கனவே நேற்று காலை முதல் 300 மி.மீ’க்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக ஆஸ்திரேலியா வானிலை மையம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இன்றும் கனமழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த கனமழையால் உயிருக்கு ஆபத்தான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று அது எச்சரித்தது.

தொலைக்காட்சி காட்சிகள் மாநிலம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்த சாலைகள், மக்கள் தெருக்களில் கயாக்கிங், ஜன்னல்கள் வரை வீடுகளை மூழ்கடிப்பது மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவதை காட்டுகின்றன. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோ, மாநிலத்தின் மையத்தில் வெள்ளநீரில் ஒரு வீடு முழுவதும் அடித்துச் செல்லப்படுவதைக் காட்டியது.

இதனால் மக்களை வீடுகளில் இருந்து வெளியேறி, சிறப்பு மையங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அவசர சேவைகள் உதவிக்கு 500’க்கும் மேற்பட்ட அழைப்புகளைப் பெற்றதாகவும், பாதிக்கப்பட்ட பகுதியின் வடக்கில் ஒரே இரவில் 180 வெள்ள மீட்புகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 51

0

0