அசால்டாக ஏணியில் ஏறும் ‘சூப்பர்மேன்’ நாய்; வீடியோ பாருங்கள்

19 January 2021, 10:51 am
Quick Share

ஏஸ் என்ற நாய், மனிதர்களை போல, ஏணியில் ஏறும் வீடியோ ஒன்று இணையதளவாசிகளை வியப்பில் ஆழ்த்தியதை அடுத்து, அது வைரலாகி உள்ளது. முதலில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ, பின் டுவிட்டருக்கு பரவியது.

ரெட்ஹாவ்காஷ்லே என்ற டிக்டாக் பயனர் ஒருவர், வீடியோ ஒன்றை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், நாய் ஒன்று, வீட்டின் கூரையில் இருக்கிறது. அதன் எஜமானரும் உடன் இருக்கிறார். படிக்கட்டுகள் ஏதுமின்றி, நாய் எவ்வாறு மேல் ஏறியது என நாம் குழம்பும் நிலையில், ஏணி ஒன்றை அதன் எஜமானர் காட்டுகிறார்.

பின், நாய் எவ்வாறு மேல் ஏறியது என காட்டும், சிசிடிவி காட்சி இணைக்கப்பட்டுள்ளது. அதில், ஏஸ் என்ற அந்த நாய், மனிதர்களைப்போல மிகவும் எளிமையாக, படியில் கால் வைத்து ஏறுகிறது. மற்றொரு நாய் கீழிருந்து அதனை வேடிக்கை பார்க்கிறது. முதலில் டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோ, பின் டுவிட்டருக்கும் பரவி, அது வைரலானது.

பொதுவாக பூனைகள் மட்டுமே இவ்வாறு எந்த இடத்திலும் ஏறும் என அனைவராலும் அறியப்பட்டிருக்கிறது. ஆனால், நாய் ஒன்று இவ்வாறு செய்வது தான் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. டுவிட்டரில் மட்டும் இந்த வீடியோ 79,500 ரீட்வீட் மற்றும் 4,13,000 லைக்குகளுடன் 6 மில்லியன் வியூவ்ஸ்களை பெற்று வைரலாகி உள்ளது.

டுவிட்டர் பயனர்களில் ஒருவர், தனது நாய் ஏணியில் ஏறும் வீடியோவையும் பகிர்ந்து, தனது நாயும் ஏணியில் ஏறும் என பதிவிட்டுள்ளார். ஏறியது சரி, எப்படி இறங்கினீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். சிலர் அந்த நாயை, பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் கூடைப்பந்து விளையாடும் நாய் ‘ஏர்பட்’ உடன் ஒப்பிட்டு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Views: - 0

0

0