“பாகிஸ்தானை வெளியேற்றும் வரை ஓயமாட்டோம்”..! ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ஆவேசம்..!

18 October 2020, 5:29 pm
POK_UNHCR_Sajjad_Raja_UpdateNews360
Quick Share

கில்கிட்-பால்டிஸ்தான் தலைவரும், மனித உரிமை ஆர்வலருமான சஜ்ஜாத் ராஜா அக்டோபர் 22, 1947 அன்று பாகிஸ்தானால் நடத்தப்பட்ட கொடூரமான ஜம்மு காஷ்மீர் படையெடுப்பை நினைவு கூர்ந்தார். மேலும் அந்த நாளை எதிர்ப்பு நாள் என்று நினைவுகூர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பாகிஸ்தானால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீர் பிராந்தியத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றும் வரை பாகிஸ்தானுக்கு எதிராக எதிர்ப்பு தொடரும் என்று அவர் கூறினார்.

“அக்டோபர் 22’ஐ மறுமலர்ச்சி தினமாக நினைவுகூருவோம். அக்டோபர் 22, 1947 அன்று பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மீது படையெடுத்து அதைப் பிரித்தது. ஆனால் பாகிஸ்தான் தனது இராணுவத்தையும் அவர்களது குடிமக்களையும் காஷ்மீரிலிருந்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம் வரும் நாள் வரை எங்கள் எதிர்ப்பு தொடரும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிற்கு பெரிய அளவில் நோ சொல்வோம” என்று சஜ்ஜாத் ராஜா ட்வீட் செய்துள்ளார்.

தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அறக்கட்டளை அண்மையில் ஒரு வர்ணனையில், அக்டோபர் 22’ஐ ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இருண்ட நாள் என்று அழைத்தது. பாகிஸ்தான் அப்பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ஆபரேஷன் குல்மார்க் என்பதைத் தொடங்கி இந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவித்தது.

ஒரு ஐரோப்பிய சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்ட பழங்குடியினர் படையெடுப்பு 35,000 முதல் 40,000 காஷ்மீரிகளை கொன்றது என்றும் ஜம்மு காஷ்மீரின் தலைவிதியை மோசமான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

“பழங்குடி படையெடுப்பின் திட்டமிடுபவர்கள் மற்றும் குற்றவாளிகள் காஷ்மீர் மக்களின் முன்னணி எதிரிகள் என்பதில் சந்தேகமில்லை. 1947 அக்டோபர் 22 அன்று படையெடுப்பு தொடங்கிய நாள், ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் இருண்ட நாளாக இருக்க வேண்டும்.” என ஐரோப்பிய சிந்தனைக் குழு மேலும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய வருடங்களைப் போல் இல்லாமல், இந்த வருடம் காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்த தினம் குறித்து தொடர்ந்து பேசப்படுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதன் மூலம் காஷ்மீரிலிருந்து பாகிஸ்தானை அகற்றுவதற்கு உலகளாவிய அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply