குரான் எரிப்பு : ஸ்வீடனில் வன்முறையில் முடிந்த போராட்டம்..! 10 பேரைக் கைது செய்தது போலீஸ்..!

30 August 2020, 9:52 am
Sweden_Riots_UpdateNews360
Quick Share

தெற்கு சுவீடனில் ஏற்பட்ட மோதல்களின் போது குறைந்தது 10 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் பல காவல்துறை அதிகாரிகள் இந்த வன்முறையால் காயமடைந்தனர். போலீசார் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் படி, எதிர்ப்பாளர்கள் போலீஸ் மீது கற்களை வீசி, மால்மோ வீதிகளில் டயர்களை எரித்ததாகத் தெரிகிறது.

இஸ்லாமிய புனித நூலான குரானின் நகலை எரிப்பது தொடர்பான ஒரு போராட்டத்தில் சுமார் 300 பேர் பங்கேற்ற நிலையில் பின்னர் அது வன்முறையாக மாறியதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் லுண்ட்கிவிஸ்ட் ஸ்வீடிஷ் பத்திரிகையான எக்ஸ்பிரஸ்ஸனிடம் தெரிவித்தார்.

சுமார் 10 முதல் 20 வரையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் கைது செய்யப்பட்டனர். ஆனால் பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ஃபோர்ஸ் தெரிவித்தார். மேலும் பல போலீஸ் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் லேசான காயமடைந்தனர்.

இதையடுத்து நேற்று காலை வன்முறை தணிந்தது. “இதுபோன்று செயல்படுபவர்களுக்கு இஸ்லாத்துடன் எந்த தொடர்பும் இல்லை” என்று சமீர் முரிக் என்ற இமாம் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

“இது சரியல்ல” என்று மால்மோ குடியிருப்பாளர் ஷாஹெட் எஸ்.வி.டி பொது ஒளிபரப்பாளரிடம் கூறினார். “ஆனால் அவர்கள் குரானை எரிக்கவில்லை என்றால் அது நடந்திருக்காது” என்று அவர் மேலும் கூறினார்.

தீவிர வலதுசாரி டேனிஷ் குடியேற்ற எதிர்ப்புக் கட்சியான ஸ்ட்ராம் குர்ஸ் தலைவரான ராஸ்மஸ் பலுதான், வெள்ளிக்கிழமை நிகழ்வில் பேச மால்மோவுக்குச் செல்லவிருந்தார். அன்றைய தினம் முஸ்லீம்களுக்கான முக்கிய வாராந்திர பிரார்த்தனையின் அதே நாளாகும்.

ஆனால் பலுதனின் வருகையை அதிகாரிகள் இரண்டு வருடங்களுக்கு ஸ்வீடனுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து முன்கூட்டியே தெரிவித்தனர். பின்னர் அவரை மால்மோ அருகே போலீசார் கைது செய்தனர்.

“அவர் ஸ்வீடனில் சட்டத்தை மீறப் போகிறார் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.” என்று மால்மோவில் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலே பெர்சன் கூறினார்.

அவரது ஆதரவாளர்கள் பேரணியுடன் முன்னேறினர். இதன் போது இன வெறுப்பைத் தூண்டியதற்காக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

“இது வலிக்கிறது” என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக மால்மோவில் வசிக்கும் முஸ்லீம் சலீம் முகமது அலி தெரிவித்துள்ளார். “மக்கள் கோபப்படுகிறார்கள், நான் அதை புரிந்துகொள்கிறேன், ஆனால் விஷயங்களைச் செய்வதற்கு வேறு வழிகள் உள்ளன.” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நோர்வேயின் எல்லையில், ஒரு குழு சனிக்கிழமை முஸ்லீம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அந்த நேரத்தில் ஒரு பெண் குரானில் இருந்து பக்கங்களை கிழித்து அதன் மீது துப்பினார்.

பலுதன் கடந்த ஆண்டு பன்றி இறைச்சியில் மூடப்பட்ட ஒரு குரானை எரித்ததற்காக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார். இது முஸ்லீம்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் இறைச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மால்மோ ஸ்வீடனின் மூன்றாவது பெரிய நகரமாகும். மேலும் அதன் 3,20,000 மக்களில் 40 சதவீதம் பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 32

0

0