கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Author: Aarthi
4 August 2021, 11:22 am
Quick Share

லண்டன்: கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ‘தி லேன்செட்’ பத்திரிகையில் ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய ஆய்வை நடத்திய சுவீடன் நாட்டின் உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ் கூறும்போது,

கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என தெரிவித்தார். மற்றொரு ஆராய்ச்சியாளரான காட்சூலாரிஸ் கூறியதாவது,

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக கடுமையான இதய பாதிப்பு ஆபத்தில் இருக்கிற முதியவர்கள் தடுப்பூசி போடுவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 424

0

0