‘கார்பன்-டை- ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்’: ரூ.730 கோடி பரிசு அறிவித்தார் உலகின் No.1 பணக்காரர்..!!

22 January 2021, 2:15 pm
Elon_Musk_UpdateNews360
Quick Share

கார்பன்-டை- ஆக்ஸைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.730 கோடி பரிசாக வழங்கப்படும் என உலகின் நம்பர் 1 பணக்காரர் எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கையாளப்படுகின்றன. புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு திறன் வாய்ந்த தொழில்நுட்பமே கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த புதிய நல்ல தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.

Views: - 0

0

0