ஆகஸ்ட் 12’ம் தேதி அதிகாரப்பூர்வ வெளியீடு..! கொரோனா தடுப்பூசி குறித்து ரஷ்யா அதிரடி அறிவிப்பு..!

8 August 2020, 8:03 pm
corona_vaccine_updatenews360
Quick Share

கொரோனா தடுப்பூசி பந்தயத்தில் மிகப்பெரிய வளர்ச்சியாக வரும் ஆகஸ்ட் 12’ஆம் தேதி உலக அளவில் கொரோனா தடுப்பூசியை பதிவுசெய்த முதல் நாடாக ரஷ்யா திகழ உள்ளது. ரஷ்யாவின் துணை சுகாதார அமைச்சர் ஒலெக் கிரிட்னெவ் கொரோனாவுக்கு க்கு எதிரான தடுப்பூசி அனைத்தும் பதிவு செய்யப்படுவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கமலேயா மையம் உருவாக்கிய தடுப்பூசி ஆகஸ்ட் 12’ஆம் தேதி பதிவு செய்யப்படும். தற்போது மூன்றாவது கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. சோதனைகள் மிக முக்கியமானவை. தடுப்பூசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தான் முதலில் தடுப்பூசி போட அனுமதிக்கப்படுவார்கள்’ என்று கிரிட்நேவ் உஃபா நகரில் ஒரு புற்றுநோய் மைய கட்டிடம் திறந்து வைத்த பொது ஒலெக் கிரிட்னெவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த தடுப்பூசியை கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தடுப்பூசியை அடுத்த மாதத்திலிருந்து பெருமளவில் உற்பத்தி செய்யவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் மற்றொரு அறிக்கையில் கூறியுள்ளது.

இப்போது வரை, கொரோனாவுக்கான எந்தவொரு தடுப்பூசியும் பொது பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆறு தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனைகளின் கீழ் உள்ளன.

இதற்கிடையில், உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் 19 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளன. மேலும் நோய்த்தொற்று இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமான இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

Views: - 13

0

0