உக்ரைன் மீது போர் தொடுத்தது ரஷ்யா…தலையிடுவோருக்கு பதிலடி கொடுக்கப்படும்: ரஷ்யா அதிபர் புதின் வார்னிங்!!

Author: Rajesh
24 February 2022, 9:48 am
Quick Share

மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், போர் விவகாரத்தில் தலையிடுவோருக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 2 லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. மேலும், உக்ரைன் தலைநகரில் ரஷ்யா தாக்குதலை தொடங்கி விட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி விட்டது என தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சூழலில் புதின் கூறும்போது, உக்ரைன் பகுதி மீது ரஷ்யா ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. எங்களுடைய திட்டம் ஆனது உக்ரைன், ராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும்.

உக்ரைனின் நாசிச போக்கை நீக்க வேண்டும். எங்கள் விவகாரத்தில் யாரேனும் தலையிட முற்பட்டால், அல்லது எங்களுடையே நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், அதற்கு ரஷ்யா உடனடி பதிலடி கொடுக்கும் என அவர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதன்பின், உங்களுடைய வரலாற்றிலேயே இதற்கு முன்பு நீங்கள் சந்தித்திராத கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 774

0

0