எனக்கு உடம்பு சரியில்லையா? நீச்சல் குளத்தில் ஞானஸ்நானம் எடுத்த ரஷ்ய அதிபர்!!

20 January 2021, 10:31 am
Putin Dip - Updatenews360
Quick Share

உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில் ரஷ்ய அதிபர் புதின் உறைபனி நீரில் ஞானஸ்நானம் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இதற்கேற்றார் போல புதின் ஊடகம் பக்கம் தலையை காட்டாமல் இருந்த நிலையில் பல்வேறு சந்தேகங்களும் எழுந்தன.

இந்த நிலையில் ஏசு கிறிஸ்து ஞானஸ்நானம் எடுத்த நிகழ்வை குறிக்கும் வகையில் அதிபர் புதின், உறைபனி நீரில் ஞானஸ்நானம் செய்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போது ரஷ்யாவில் உறைபனி காலம் என்பதால் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் குளிர் உள்ளதால் அந்த உறைபனியிலும் தேவலாயத்தில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார்.

Views: - 0

0

0