ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை

14 July 2021, 6:54 pm
Quick Share

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது ஹனீஃப் அத்மரை சந்தித்துப் பேசினார். தஜிகிஸ்தான் தலைநகர் துஷன்பே நகரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக தஜிகிஸ்தானுக்கு இரண்டு நாட்கள் பயணமாக ஜெய்சங்கர் சென்றுள்ளார். ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நாளை நடைபெறுகிறது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டு விவகாரம் தொடர்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டம் கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் தங்கள் வசம் வந்துள்ளதாக தலீபான் அமைப்பு கூறியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு படையினருக்கும் தலீபான்களுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்துள்ளது.

Views: - 132

0

0