பஹ்ரைனில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலுக்கு விசிட் அடித்த இந்திய வெளியுறவு அமைச்சர்..!
25 November 2020, 3:51 pmஇஸ்லாமிய நாடான பஹ்ரைனின் மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாத்ஜி இந்து கோவிலில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று தரிசனம் செய்தார்.
“மனாமாவில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீநாத்ஜி கோவிலில் தரிசனத்துடன் நாள் தொடங்கியது. பஹ்ரைனுடனான எங்கள் நட்பு மற்றும் நெருக்கமான பிணைப்புகளுக்கு இது ஒரு சான்று” என்று ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
ஜெய்சங்கர் தற்போது நவம்பர் 24 முதல் 25 வரை பஹ்ரைனுக்கு இரண்டு நாள் பயணத்தில் உள்ளார். அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லாதீப் பின் ரஷீத் அல் சயானியுடன் நேற்று இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு துறைகளில் வரலாற்று உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார். .
“எஃப்.எம். டாக்டர் அப்துல்லாதீப் பின் ரஷீத் அல் சயானியுடன் அன்பான சந்திப்புடன் பஹ்ரைன் வருகை தொடங்குகிறது. முன்னாள் பிரதமர் எச்.ஆர்.எச் இளவரசர் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா காலமானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது” என்று ஜெய்சங்கர் நேற்று ட்வீட் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
“எங்கள் வரலாற்று உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். கொரோனா காலங்களில் இந்திய சமூகத்தை சிறப்பு கவனித்துக்கொண்டதற்கு பஹ்ரைனுக்கு நன்றி” என்று அவர் அடுத்தடுத்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
0
0