இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் இவர் தான்..! இனி தமிழர்களின் நிலைமை மாறுமா?

5 December 2019, 8:37 pm
Quick Share

கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இலங்கையில் அண்மையில் தான் அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே வென்றார்.

வெற்றி பெற்ற கையோடு அதிபராகவும் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு உடனடியாக தமிழர் பகுதிகளில் ராணுவத்தை களம் இறக்கினார்.

அவரின் இந்த நடவடிக்கை தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கோத்தபயாவை கண்டித்தனர்.

அவரது அரசு முறைப்பயணமான டெல்லி வருகையையும் கண்டித்து, போராட்டங்களில் குதித்தனர். இந் நிலையில் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தேர்தலில் தோற்ற சஜித் பிரேமதாசா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.