அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை செனட் சபை உறுப்பினராக தேர்வு..!

4 November 2020, 12:44 pm
Sarah_McBride_UpdateNews360
Quick Share

சாரா மெக்பிரைட் அமெரிக்க மாகாணமான டெலாவேரில் தனது செனட் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அரசியலில் புதிய வரலாறு படைத்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் செனட் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை எனும் சிறப்பு அந்தஸ்தை சாரா பெற்றுள்ளார். 

டெலாவேரில் உள்ள முதல் செனட் மாவட்டத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஸ்டீவ் வாஷிங்டனை 30 வயதான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த திருநங்கை சாரா மெக்பிரைட் தோற்கடித்து தனது வெற்றியை உறுதி செய்துள்ளார்.

வெற்றி உறுதியான சிறிது நேரத்திலேயே, “நாங்கள் அதை செய்தோம். இன்றிரவு ஒரு எல்ஜிபிடிகியூ குழந்தையை எங்கள் ஜனநாயகம் அவர்களுக்கும் போதுமானது என்பதைக் காட்டுகிறது என்று நம்புகிறேன்.” என சாரா மெக்பிரைட் ட்வீட் செய்துள்ளார்.

எல்ஜிபிடிகியூ என்பது ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோரின் அமைப்பாகும். 

ஒரு அறிக்கையில், எல்ஜிபிடிகியூவின் தலைவர் அன்னிஸ் பார்க்கர், “மெக்பிரைடின் வெற்றி எங்கள் அரசியலில் திருநங்கைகளின் தலைவர்களுக்கு வளர்ந்து வரும் செல்வாக்கிற்கு ஒரு சக்திவாய்ந்த சான்று” என்று குறிப்பிட்டார்.

சாரா மெக்பிரைட் முன்னதாக ஒபாமா நிர்வாகத்தின் போது வெள்ளை மாளிகையில் பணிபுரிந்தார். பின்னர் டெலாவேர் பொதுச் சபையில் திருநங்கைகளின் உரிமை குறித்த மசோதாவை ஆதரித்தார். இது 2013’இல் அங்கு சட்டமானது.

2016’ஆம் ஆண்டில், ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் உரையாற்றியதன் மூலம், ஒரு பெரிய கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய முதல் திருநங்கை எனும் சிறப்பையும் பெற்ற நிலையில் தற்போது அமெரிக்க செனட் தேர்தலில் வென்றதன் மூலம் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

Views: - 16

0

0

1 thought on “அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை செனட் சபை உறுப்பினராக தேர்வு..!

Comments are closed.