பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் நீக்கம்..! இந்தியாவுக்கு தீபாவளி பரிசு கொடுத்த சவுதி அரேபியா..!

28 October 2020, 2:48 pm
Saudi_Arabia_Removes_Gilgit_Baltistan_Kashmir_From_Pakistans_Map
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சமூக ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா இன்று தெரிவித்தார்.

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து சவுதி அரேபியா நீக்கியுள்ளது!!!!” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“இந்தியாவுக்கு சவுதி அரேபியாவின் தீபாவளி பரிசு : கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தானின் வரைபடத்திலிருந்து நீக்குகிறது” என்று தலைப்பிடப்பட்ட ஒரு படத்தையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

நவம்பர் 21-22 தேதிகளில் ஜி -20 உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்து வரும் சவுதி அரேபியா, 20 ரியால் பணத்தாள் ஒன்றை வெளியிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதில் காட்டப்பட்டுள்ள உலக வரைபடம் கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவற்றை பாகிஸ்தானின் பகுதிகளாகக் காட்டவில்லை என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் நடவடிக்கை பாகிஸ்தானை இழிவுபடுத்தும் முயற்சியில் ஒன்றும் குறைவாக இல்லை என்று பாகிஸ்தான் ஊடக அறிக்கைகள் இதை விமர்சித்து வருகின்றன. மேலும் சவுதி அரேபியா அதன் புதிய கூட்டணிக்கு ஏற்றதாக தன்னை மாற்றிக்கொண்டு விட்டது என்றும் பாகிஸ்தானில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை உலக அரங்கில் எழுப்பி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இந்தியா சத்தமே இல்லாமல், சவுதி அரேபியாவை பாகிஸ்தான் ஆதரவு வட்டத்திலிருந்து முழுமையாக வெளியேற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும் சவுதியின் இந்த நடவடிக்கையைப் பின்பற்றி, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள இதர நாடுகளும் பாகிஸ்தானுக்கு இதே போல் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே உளநாட்டுப் போராட்டங்களால் சிதைந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியாவின் இந்த நவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 30

0

0

1 thought on “பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் நீக்கம்..! இந்தியாவுக்கு தீபாவளி பரிசு கொடுத்த சவுதி அரேபியா..!

Comments are closed.