பசியால் வாடும் யானைக்கூட்டம்: குப்பையை கிளறி உணவு தேடும் பரிதாபம்…!!
26 November 2020, 9:16 pmகொழும்பு: உணவுக்காக காட்டு யானைகள் குப்பை மேட்டைக் கிளறி உணவு தேடும் காட்சிகள் வேதனையடைய செய்வதாக உள்ளது.
இலங்கையில் சமீபகாலமாக காடு அழிப்பு நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளதால், காட்டு யானைகள் தங்கலது வாழ்விடங்களை இழந்து உணவு கிடைக்காமல் சுற்றி திரியும் புகைப்படங்கள் அடிக்கடி செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், காட்டில் வாழும் யானைகள் தங்கள் வாழ்விடங்களை இழந்து உணவை தேடி குப்பை மேட்டிற்கு சென்று அழுகிய காய்கறிகளுடன் ஆபத்து நிறைந்த பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் ஆகியவற்றையும் உண்பது போன்ற காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. காட்டு யானைகள் பன்றிகள் போல குப்பை மேட்டைக் கிளறி உண்ணும் காட்சி பார்ப்போரை வேதனையடைய செய்வதாக உள்ளது.
இதில் ஆபத்து என்னவென்றால், குப்பைக் மேட்டில் யானைகள் சாப்பிடும் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடித் துகள்கள், அழுக்குகளை உண்பதால் யானைகள் நோய்வாய்ப்பட்டு அதிகளவில் மடிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.மேலும் இலங்கையில், 2019ம் ஆண்டில் மட்டும் 361 யானைகள் உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0
0