கோபத்தால் கொலைகாரனான 13 வயது மாணவன்.. சக மாணவனை பள்ளியிலேயே வெட்டிக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்..!!

21 July 2021, 5:54 pm
Singapore murder - updatenews360
Quick Share

சக மாணவனை பள்ளி வளாகத்திலேயே வைத்து 13 வது சிறுவன் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. அந்தப் பள்ளியில் இடைவேளை சமயத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறி, கழிவறைக்கு சென்றுள்ளனர். பின்னர், வந்து பார்த்த போது வகுப்பில் ஒரு மாணவன் ரத்த வெள்ளத்தல் மிதப்பதைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக உடனே ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.

பள்ளி வகுப்பறையிலேயே மாணவன் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், இது தொடர்பாக போலீசுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, அதே பள்ளியில் படித்து வரும் 13 வயது மாணவன்தான் இந்தக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தச் சிறுவனை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 134

0

0

Leave a Reply