பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க ஸ்காட்லாந்து அரசு முடிவு…!!

26 November 2020, 9:58 am
scotland - updatenews360
Quick Share

ஸ்காட்லாந்தில் சாண்ட்டரி நாப்கின்களை பெண்களுக்குக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொது இடங்கள், பள்ளிகள் கல்லூரிகள் என கல்வி நிலையங்களிலும் பெண்களுக்கு தேவையான சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மோனிகா லெனான் என்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

வறுமை காரணாமக சாணிட்டரி நாப்கின் மற்றும் அது சார்ந்த பொருட்களை சில பெண்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்படுவதால் அந்த பொருட்களை நாட்டு பெண்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கும் வகையில் மசோதா கொண்டுவரப்பட்டது. அந்த மசோதா மீதான விவாதம் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த விவாதத்திற்கு பின் சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுசார்ந்த பொருட்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 121 உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் மசோதா சட்டமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து, பெண்களுக்கு சாணிட்டரி நாப்கின்கள் மற்றும் அது சார்ந்த பொருட்களை இலவசமாக வழங்கும் முதல் நாடு என்ற பெருமையை ஸ்காட்லாந்து பெற்றுள்ளது. மேலும், ஸ்காட்லாந்து அரசின் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Views: - 17

0

0