ஜெர்மனியை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம்..! பலர் படுகாயம்..! பின்னணி என்ன..?

20 November 2020, 3:24 pm
4_Injured_in_Germany_UpdateNews360
Quick Share

மேற்கு ஜெர்மனிய நகரமான ஓபெர்ஹவுசனில் கத்திக் குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து நான்கு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஓபர்ஹவுசனில் ஒரு நபர் கத்தியால் பலரைத் தாக்கினார். இதில் நான்கு பேர் காயமடைந்தனர் என ஜெர்மன் அதிகாரிகள் கூறினர்.

போலீஸ் செய்தித் தொடர்பாளர் இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார். சந்தேக நபர் காயமடைந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பலியானவர்கள், கத்திக் குத்துக் காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும், இந்த சம்பவம் ஒரு குடும்ப தகராறாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஒரு போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசியபோது, இதில் ஒரு பயங்கரவாத நோக்கத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறினார்.

Views: - 306

0

0