“விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் பாலியல் மிரட்டல்“ : பிரபல நடிகை பரபரப்பு புகார்!!

6 February 2021, 6:41 pm
Farmers Actress Insta - Updatenews360
Quick Share

விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல் வருவதாக பிரபல நடிகை வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய நடிகர், நடிகைகள் உட்பட ஹாலிவுட் நடிகர், நடிகைகள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் பிரபல நடிகையான ஜமீலா ஜமீல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார். அதில் தாம் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து ஆதரவாக பேசும் போது பாலியல் வன்கொடுமை மிரட்டலுக்கு ஆளாகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் கொலை மிரட்டலும், பாலியல் அச்சுறுத்தலமும் சந்திப்பதாகவும், நீங்கள் எனக்கு அழுத்தம் கொடுக்கும் போது நான் ஒரு மனிதர் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

Image result for jameela jamil

மேலும் இந்த விஷயத்தில் பேசும ஆண்களுக்கும் அழுத்தம் கொடுக்கறீர்கள் என நம்புவதாகவும் அந்த இன்ஸ்டா பதிவில் ஜமீலா ஜமீல் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவுக்கு பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 26

0

0