பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா?!! ஷின்சோ அபே திடீர் முடிவு!!

28 August 2020, 12:04 pm
Japan PM - Updatenews360
Quick Share

டோக்கியோ : உடல்நலக்குறைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற ஜப்பான் உருவாகுவதற்கு காரணமாக இருந்தவர் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே. 65 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாக குடல் நோயால் அவதியுற்று வந்தார்.

சமீபத்தில் குடல் நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் உடல்நலக்குறைவாலும் வயது மூப்பு காரணமாக தனது பிரதமர் பதவியை மற்றொருவருக்க விட்டுக்கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ஷின்சோ அபே ராஜினாமா செய்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வரும் ஷின்சோ அபே ஜப்பான் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அவரது இடத்தை மற்றொருவர் நிரப்புவது கடினம் என அந்நாட்டு மக்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 33

0

0