இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தற்காலிக சிகிச்சை மையமாக மாறிய சொகுசு கப்பல்..!!

Author: Aarthi Sivakumar
13 August 2021, 4:17 pm
Quick Share

இந்தோனேசியா: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிதக்கும் கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாறியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிதக்கும் கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாறியுள்ளது. இந்த கப்பலில் 800 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

image

மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 60 சுகாதார பணியாளர்களும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்படுகின்றனர். இந்த கப்பல் இந்தோனேசியாவின் துறைமுக நகரமான மகாசார் பகுதியில் நங்கூரம் இடப்பட்டுள்ளது.

image

தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது இந்த கப்பலிசிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஜூலை 30 துவங்கி ஆகஸ்ட் 12 வரை 4,42,949 பேர் புதிதாக அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 491

0

0