டெஸ்லா காரில் தூங்கிய டிரைவர்; அவ்ளோ நம்பிக்கை!

19 January 2021, 1:14 pm
Quick Share

தானாக இயங்கும் டெஸ்லா காரில், ஓடிக்கொண்டிருக்கும் போதே, டிரைவரும், உடனிருந்த பயணியும் தூங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதனை வேறு ஒரு காரில் இருந்த நபர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாக பரவியது.

அதிநவீன டெஸ்லா கார்களில் செல்ப் டிரைவ் செய்வது மட்டுமன்றி, செமி அடானமஸ் டெக்னாலஜி மூலமும் இயக்கலாம். ஆட்டோபைலட் மூலம் இயங்கும் இந்த தொழில்நுட்பத்தில், ஸ்டியரிங், ஆக்சிலரேட் மற்றும் பிரேக்கையும், தானாகவே தொழில்நுட்பம் கட்டுப்படுத்திக் கொள்ளும். ஆட்டோபைலட், ஆட்டோ லேன் சேஞ்ச், ஆட்டோ பார்க், டிராபிக் லைட் மற்றும் ஸ்டாப் சைன் கண்ட்ரோல் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

டெஸ்லா கார்கள், தொழில்நுட்பம் உதவியுடன் தானாகவே ஓடினாலும், டிரைவர் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தயாரிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் டெஸ்லா கார் வைத்திருப்பவர்கள், ஆட்டோடிரைவ் செய்தாலும், எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்கிறார்கள்.

விதிவிலக்காக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. டெஸ்லா கார் ஓடிக்கொண்டிருக்கும் போதே, அதன் டிரைவரும், பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பயணியும் அசந்து தூங்குகின்றனர். இதனை மற்றொரு காரில் பயணித்த ஒருவர் வீடியோ எடுத்து அதனை டுவிட்டரில் பதிவிட அது வைரலாகி வருகிறது. இது எங்கு எடுக்கப்பட்டது என்ற விவரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு இதுபோல மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் டெஸ்லா கார் ஓடிக்கொண்டிருந்த போது, அதன் டிரைவர் தூங்கியது விவாதத்தை கிளப்பியது நினைவிருக்கலாம். விரைவில்.. இந்தியாவில் டெஸ்லா கார் களமிறங்க உள்ளது. நம் மக்கள் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறார்களோ…!

Views: - 6

0

0