1,000 டாலர் நோட்டுக்களுக்கு தடை விதித்தது சிங்கப்பூர்..! டிஜிட்டல் முறைக்கு மாற மக்களுக்கு உத்தரவு..!

3 November 2020, 2:38 pm
sgd_1000_note_ban_singapore_updatenews360
Quick Share

பண மோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்களை எதிர்கொள்வதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 1,000 சிங்கப்பூர் டாலர் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக சிங்கப்பூர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இப்போது முதல் 2020 டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு 1,000 டாலர் நோட்டுகள் கிடைக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச விதிமுறைகளுடன் ஒத்துப்போகிறது மற்றும் முக்கிய அதிகார வரம்புகள் ஏற்கனவே இதுபோன்ற பெரிய மதிப்பு நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டன என்று நாட்டின் ரிசர்வ் வங்கியாக செய்லபடும் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரு 1,000 சிங்கப்பூர் டாலர் என்பது தற்போது இந்திய மதிப்பில் 54,501 ரூபாய் மதிப்புடையது.

எனினும் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 1,000 டாலர் நோட்டுகள் சட்டப்பூர்வ பயன்பாட்டில் இருக்கும். மேலும் பணம் செலுத்துவதற்கான வழிமுறையாக தொடர்ந்து பயன்படுத்தப்படலாம்.

மேலும் வங்கியில் வரவு வைக்கப்படும் 1,000 டாலர் நோட்டுகளை வங்கிகள் தொடர்ந்து புழக்கத்தில் விடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாணய ஆணையம் 1,000 டாலர் நோட்டுகளுக்கு ஈடாக போதுமான அளவு பிற பிரிவு பணத்தாள்களை புழக்கத்தில் விடும் என அறிவித்துள்ளது. குறிப்பாக 100 டாலர் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் விடப்படும். இது 1,000 டாலர் நோட்டுக்கு அடுத்த மிக உயர்ந்த நோட்டாக தற்போது பயன்பாட்டில் உள்ளது.

அதே நேரத்தில் அனைவரையும் முழுமையாக டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்த எம்ஏஎஸ் ஊக்குவித்துள்ளது.

Views: - 49

0

0

1 thought on “1,000 டாலர் நோட்டுக்களுக்கு தடை விதித்தது சிங்கப்பூர்..! டிஜிட்டல் முறைக்கு மாற மக்களுக்கு உத்தரவு..!

Comments are closed.