பனிச்சறுக்கு வீரரை விடாமல் துரத்திய கரடி: வைரல் வீடியோ!

By: Poorni
31 January 2021, 8:54 am
Quick Share

மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீரரை கரடி ஒன்று விடாமல் துரத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட மக்கள், “வேகமாக, வேகமாக! போ, கரடி உன்னைத் துரத்துகிறது!” என கூச்சலிட்டனர்.

பைக்கில் பயணிக்கும் போது, நாய் ஒன்று துரத்தினாலேயே, காலை மேலே தூக்குகிறேன் பேர்வழி என பலர் பைக்கில் இருந்து விழுந்து, சில்லரை வாங்கியவர்கள் பல பேர். உங்களுக்கு கூட அந்த அனுபவம் இருக்கலாம். ஆனால் இந்த பனிச்சறுக்கு வீரருக்கு நடந்தது, திகில் கனவு போல இருக்கும்.. தூங்கும் போது கூட அவர் கனவில் வந்து அந்த காட்சி பயமுறுத்தும்.

ருமேனியா நாட்டில் பிரபலமான மலைவாசஸ்தலம் ஒன்றின் அழகை, சுற்றுலா பயணிகள் சாய்லிப்டில் பயணித்தபடி, கண்டு ரசித்து கொண்டிருந்தனர். வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்ற அந்த காட்சியை தங்கள் மொபைலில் வீடியோவாக ஒருவர் பதிவிட்ட போது, திகில் பட காட்சி போன்ற ஒரு சம்பவம் அவரது மொபைலில் சிக்கியது.

அங்கு மேலிருந்து கீழாக, பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீரர் ஒருவரை பழுப்பு நிற கரடி ஒன்று வேகமாக துரத்தி வந்தது. இதனை கண்டு திகிலடைந்த சுற்றுலா பயணிகள், ‘‘திரும்பி பார்க்காதே.. வேகமாக போ.. கரடி ஒன்று உன்னை விடாமல் துரத்தி வருகிறது.. கடவுளே அவரை காப்பாற்று’’ என கூச்சலிட்டனர்.

அந்த பனிச்சறுக்கு வீரரும் வேகத்தை கூட்டி, கரடியிடமிருந்து தப்பித்து வந்தார். இந்த வீடியோ காட்சிகள், டுவிட்டர், பேஸ்புக், ரெடிட் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘இது ஒரு கெட்ட கனவு போல இருக்கிறது’ என டுவிட்டர் பயனர் ஒருவர் கமெண்டில் தெரிவித்துள்ளார். வரும் வேகத்தை பார்த்தீர்களா.. சிக்கினால் சிதைத்திருக்கும் போலிருக்கிறதே!!

Views: - 53

0

0