நடுங்க வைக்கும் ஒமிக்ரான்…இங்கிலாந்தில் சமூக பரவல் தொடங்கியது: நாடாளுமன்றத்தில் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
7 December 2021, 6:13 pm
Quick Share

பிரிட்டன்: இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கடந்த ஞாயிறுக்கிழமை வரை 90 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை ஒரே நாளில் 336 ஆக உயர்ந்தது.

இது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், வெளிநாடு செல்லாத பிரிட்டன் மக்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு 350 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் பிரிட்டன் வருவோர் 10 நாட்கள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் சமூக பரவலாக ஒமைக்ரான் மாறிவிட்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் லேசான தொற்று இருந்ததாகவும், பின்னர் தீவிர பாதிப்பாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 509

0

0